திங்கள், 1 ஜூன், 2015

the root thodu and its offsprings

தொடு என்பதோர் அழகிய தமிழ்ச் சொல். இதுபோலும் பல சொற்கள் ஒவ்வொரு மொழியிலும் வாழ்கின்றன.  மனிதர்கள்  போலும் அவை  குடும்பமாக வாழ்கின்றன.  ஆகையால் ஒரு சொல்லின் குடும்பத்தை அறிந்துகொண்டால் அச்சொல் எந்த மொழிக்குரிய சொல் என்று  அறிந்துகொள்ளலாம் . குடும்பத்தை அறிய  அடிச்சொல் ஆய்வில் முனைந்து  ஈடுபடுதல் வேண்டும் .

தொடு>.தொடர்

தொடுதல் என்னும் நிகழ்ச்சி பலவாறு நிகழலாம்.  \தொடுகின்ற இடத்திலிருந்து  நீண்டு செல்வதை  தொடர்தல் என்கிறோம்.  அர்  என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  இச்சொல் அமைந்துள்ளது.   இப்படி அமைந்த சொற்கள் பலவாம் .   இடு >  இடர்; படு >படர் ;   அடு > அடர்;   அர்  என்பது  பெயர்ச்சொல்லிலும்  வரும் 

தொடு  >  தொடை.

இது  ஐ என்னும் இறுதியைப் பெற்று அமைந்த சொல். உடம்பிலிருந்து தொடர்வது தொடை.
அசை , சீர், தளை  :   தொடுக்கப்படுவது தொடை.  

தொடு  தொ டி

கைகளைத் தொட்டு  நிற்பதுபோல் அணியப்படுவது தொடி  அல்லது வளையல். அன்றித்    தொடுதல் என்பது  தோண்டுதல் என்றும் பொருள்  பெறும் ஆதலின்  தோண்டப் பெற்று வளையமாக்கப் பட்டது  என்றும் பொருள் அமைதல் கூடும்.   நடுவில் உள்ளதைத் தோண்டி எடுத்துவிட்டால் சுற்றி இருப்பதோ வளையமாகிவிடும். இதற்கு மூங்கில் போலும் வட்டமான பொருள் வேண்டும் , பண்டையர் எப்படித்  தொடிகளைச் செய்தனர் என்பதை  இதிலிருந்து சொல்லலாம்  குறுக்கில் அறுத்து நடுவில் உள்ளீடுகளைத் தோண்டி எடுத்திட வேண்டும் .

தொடர்வோம்


கருத்துகள் இல்லை: