வெள்ளி, 16 மே, 2025

சிவமாலாவின் சிறப்பு சேமிப்பு (saving)

Date of photo:   1965 after wedding.  The uniform then in use among others   for this rank of a probationary inspector, was  that of  wearing  two Maltese crosses.  


https://www.maltauncovered.com/malta-history/maltese-cross/
Introduced to Malta by the Knights of St. John of Jerusalem upon taking possession of the islands in 1530.

வியாழன், 2 மே, 2024

தினாத்யயா - சமஸ்கிருதச் சொல். பொருள்.

தினம் என்ற சொல்,  தீ என்ற தமிழிலிருந்து வருகிறது.  தீ என்பதோ தேய் என்பதிலிருந்து வருகிறது. சில பொருட்கள் தேய்வதனால் வெப்பம் மிக்குவந்து தீ உண்டாகிவிடுகிறது.

தினம் என்பது தமிழ்ச்சொல் என்று சில தமிழாசிரியர்கள் கூறியுள்ளனர்.

முதலில் தமிழர்கள் தமிழும் சமத்கிருதமும் இருகண்கள் என்றும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று சொன்னார்கள். வெள்ளைக்காரன் அது எங்கள் கண்டத்திலிருந்து உங்கள் கண்டத்துக்கு வந்த மொழி என்று கட்டுரைத்தபின்,  அவர்கள் கடன் வாங்கியதைத் தெரிவிக்காமல், நீங்கள் எல்லாம் கடன் வாங்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிட்டான். அந்நாளிலிருந்து தமிழறிஞர்கள் மனமிகக் கவன்று,  அது சமஸ்கிருதம், இது சமஸ்கிருதம் என்று பிரித்து. ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வால்மிகி என்ற தமிழ்ப்புலவன் தான் முதலில் சமஸ்கிருதத்தில் நூலெழுதியவன்.  அவன்பாடிய இராமரும் நீலவண்ணத்தவர்தான். வெள்ளையன் அல்லன்.

வான்மிகி என்ற புலவர் சங்கத்திலும் சென்று பாடியுள்ளார்.

சமஸ்கிருதம் என்பது நம் உள்ளூர் பூசை மொழி. 

நிற்க, தினம் என்பது நாள் என்று பொருள்படுதலால்,  தினாத்யா  என்ற சொல்லைப் பார்ப்போம்.  தினம் அற்றுப்போவது தான்  தினாத்யா அல்லது தினாத்யாய. அற்றுப்போவது என்றால் முடிந்துபோவது.  அறவே இல்லாமல் போவது அன்று.  (அல்ல).  தினம் அற்றுப் போவதால் இரவு வந்துவிடும்.  அற்று -  இன்று அத்துப்போனால்  நாளைச் சூரியன் முளைக்கும்.  அப்போது   வரும். பூமி சுற்றுவதும் நீங்கள் அறிந்ததே.[ Dinātyaya]

தினேஸ்வரன் என்ற பெயரும் பலரும் விரும்பும் பெயர். தினத்துக்கு ஈஸ்வரன் என்றால் சூரியன். இறைவன் > இஷ்வர் ( ஈஷ்வர்)> ஈஸ்வர் மீண்டும் அன் பெற்று ஈஸ்வரன் ஆகும்.  சூரியன் தெய்வமாக வணங்கப்படுவது. சூடு கொடுப்பவன் ஆதலால் சூடியன்: சூரியன் ஆனான்.

தினாதி என்பது தின ஆதி,  காலைப்பொழுது, இப்போது இவ்வாறு பல சொற்கள் உள்ளன. இந்த மாதிரிச் சொற்களின் மூலம் சமஸ்கிருதமும் பல பெற்று சொற்செழுமை அடைந்தது. 

தின அன்று அகம் என்பவற்றைக் கொண்டு  தின அந்து அக >  தினாந்தக என்ற சொல் உண்டானது. மாலை வந்து மருவும் நேரத்தைக் இது குறித்தது.

அன்று அல்ல என்பதுமாகும், அன் து < >அந்து

தேய் > தீ > தினம்போல,  தேய் என்பதிலிருந்தே டே  ( நாள் ) என்பதை ஐரோப்பியர்கள் உண்டாக்கிக்கொண்டனர்.

தீ இன் அம் > தி ன் அம் > தினம்,.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின

புதன், 1 மே, 2024

புதிய பிரதமர் வோங், மூத்த அமைச்சராகும் லீ மேதகையோருக்கு வாழ்த்துக்கள்.

 சிங்கமான பலசிங்கர்  சிறப்பொடுவாழ் சிங்கைநகர்

தங்கநகர்த் தலைமைசேர்  நல்அமைச்சர் வோங்கவரும்

பொங்கெழிலே  பூத்திருக்கப் பொறுப்பேற்கும் நன்னாளில்

தங்குகசீர்  மங்களமே  தரணிப்பண் நிலைதருமே.


நிறைவான செல்வமெலாம் நித்தலுமே பெருகிவர

நிறைவானும் குன்றாத மழைபொழியச் செழிப்பாகத்

திறைபொருளின் வளம்கொழிக்கத் தேன்மொழியும் கலந்துவர

இறைவரமும் தொடர்தரவே இவராட்சி நிலைதருமே.


பல்லாண்டு  நீள்நகரைப்  பண்புடனே ஆண்டவர்நம்

தொல்குடியின் லீசியன்லுங் துவள்வில்லா வானம்போல்.

வல்கணமொன்  றில்லாமல் வளமான ஆட்சிதந்தார்

நல்மணமே ஒன்றியன்று நலம்காக்க   நிலைதருமே.


இவை மூன்றடுக்கிய தாழிசைப்பாக்கள்.

அரும்பொருள்:

திறை பொருள்  - வரியும் பொருளியலும்

உம்மைத் தொகை.

நித்தல் - என்றும்

தரணிப்பண் -  உலகம் ஒத்து இருந்து பாராட்டுதல்

சிங்கர் -  சிங்கம்போன்ற மனிதர்கள் சிங்க( ம் ) + அர்> சிங்கர்

சிங்க(மவ)ர்>  ( தொகுத்தல் விகாரம் என்றும் கொள்க)

தொடர்தர =  தொடர்ந்துவர

இறைவரம் - கடவுள் கிருபை

தொல்குடி -  முதல் தலையமைச்சரின் குடி

நீள்நகர் - பெருநகர்

வல்கணம் - கடினமான தன்மை

ஒன்றியன்று -  ஒன்றாக இணைந்து

ஒன்று இயன்று - ஒன்றாய் இயன்று. ஆய் உருபு தொக்கது.

துவள்வில்லா -  துவள்வு இல்லா - மடங்கிக்கெடுதல் இல்லாத.

வன் கணம் நன் கணம் என்று புணர்த்தாமல் நல் வல் என்றே எதுகைநோக்கி இருத்தப்பட்டன. ஆகவே நல்கணம், வல் கணம், வன் கணம் : வன்மை நிகழ்வின் திரட்சிகள்;  நல் கணம் - நன்மை நிகழ்வின் திரட்சிகள் ( ஆட்சியில்) .

நல் கணம் என்பதைப் பயன் படுத்தாமல்  நல் மணம் என்று பாடியுள்ளோம்.