ஞாயிறு, 23 மார்ச், 2014

சாத்தியம்

சாதித்தல் என்னும் சொல்லைக் கண்டோம். ஆங்கிலத்தில் கடலோடிகள், கப்பலோட்டிகள் ஆகிய மக்களிடமிருந்து மொழிக்குக் கிட்டிய சொற்களின் ஒரு பட்டியல் இருத்தல் போலவே, ஒவ்வொரு மொழியிலும் துறைச்சொற்கள் இருக்கின்றன.  சாதித்தல் என்பது மரத்தொழிலுடையோரிடமிருந்து தமிழிற்கும் தமிழிலிருந்து அது தாவிய வேறுமொழிகட்கும் சொல்லாய்க்  கிட்டிற்று என்பது தெளிவுற்றது.

இனிச் சாத்தியம் என்னும் சொல்லினைக் காண்போம்.  இதுவும் சாய்த்தல் என்னும் சொல்லினடிப் பிறந்ததே.

சாத்தியம் எனின் சாய்க்க இயல்வது என்பது அமைப்புப் பொருளாகும்,.

சாய்த்து + இயல்.> சாய்த்து + இயம் >  சாத்தியம் என்றானது.

இயல் - ( இயம் ) என்பது இயல்வது எனற்பொருட்டு. இது,  திறல் > திறம் என்பதுபோன்ற திரிபு.  இறுதி லகர ஒற்று, மகர ஒற்றாயது.  பின், சாகரத்தை அடுத்து நின்ற யகர மெய் மறைந்து, சாத்தியம் என்று அமைந்தது.

இதனைச்  "சாய்த்து" என்று எச்சவினையாகக் கொள்ளாமல்,   சாய் பகுதி;   து ஒரு விகுதி; இயம் , பின்னுமொரு விகுதி என்றும் கொள்ளலாம். முடிபு ஒன்றேயாம்.

In some languages words may be formed or derived from participles too. Tamil preferred formation of words from  (command)  verbs themselves. But whether our pundits liked the event or not, Tamil has its fair share of words developed from  participles.  A glaring example of course is "Andavan" which takes on a "past tense format". நோட் But in usage, the word does not refer to tense.

இப்போது சாத்தியம் என்பதில் "சாய்த்தல்" பொருள் மறக்கப்பட்டு, பொதுநிலையாக‌ "இயல்வது" எனறு மட்டும் குறித்து வழங்குகிறது. மரத்தொழிலாளர் மரம்சாய்த்தல் பற்றிய நினைப்பும் குறிப்பும்  நீங்கவே,  சொல் பொதுப்பொருள் உடையதாய் கருத்துத்தடைகள் யாதுமின்றி வலம்வருகிறது.

கருத்துகள் இல்லை: